113 வயதில் மூதாட்டிக்கு வந்த வினோத ஆசை - பொய் சொல்லி பேஸ்புக் அக்கவுண்ட் ஓபன் செய்த பாட்டி!

Facebook United States of America
By Vinothini Jul 22, 2023 10:24 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

மூதாட்டி ஒருவர் தனது ஆசைக்காக பொய் கூறி பேஸ்புக் அக்கவுண்ட் ஓபன் செய்த சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மூதாட்டியின் ஆசை

அமெரிக்காவில் மின்னசோட்டா பகுதியில் 113 வயதான அன்னா ஸ்டோஹர் என்ற மூதாட்டி உள்ளார். இவர் 2014-ல் அக்டோபர் 12 அன்று தனது 114-வது பிறந்தநாளுக்கு பல பேர் வாழ்த்துகளைப் பெற வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.

old-lady-opened-an-account-in-facebook-by-lying

அதனால் பேஸ்புக்கில் கணக்கு ஆரம்பித்தால் பல்லாயிரம் பேரின் "ஹாப்பி பர்த்டே" வாழ்த்தைத் தன் வால் போஸ்ட்டில் பார்த்து சந்தோஷப்படலாமே என்று நினைத்தார். ஆனால் பேஸ்புக்கில் 13 வயதை எட்டியவர்கள் முதல் 99 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இணைய முடியும். அதனால் இவர் தனக்கு 99 வயது மட்டுமே ஆகிறது எனப் பதிவு செய்துவிட்டார்.

பேஸ்புக் அக்கவுண்ட்

இந்நிலையில், இந்த பாட்டியின் மகனிடம் விற்பனை செய்வதற்காக ஸ்மார்ட் போன் விற்பனையாளர் ஒருவர் இவரது வீட்டிற்கு வந்தார். அவர்தான் பாட்டிக்கு இணையதளம், ஐ பாட், பேஸ்புக்னு பல தொழில் நுட்பங்களை பயன்படுத்த சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

old-lady-opened-an-account-in-facebook-by-lying

ஆனால் பாட்டி சொன்ன பொய் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது என்று பார்த்தால், அமெரிக்க அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சதம் அடித்து, பின்னர் 112 வயதைக் கடந்து வாழும் 223 பேரில் முதியோர்களில் அன்னா பாட்டியும் ஒருவராக உள்ளார்.

அதன்மூலம் பாட்டி அளித்த பொய்யான வயது அம்பலமானது. இதுபற்றி பாட்டியிடம் அப்போது கேட்டபோது, "99 வயது கடந்தவர்களும் பேஸ்புக்கில் இணைய ஆசைப்படுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஏற்ற மாதிரி சமூக வலைத்தளம் மாறவேண்டும் அல்லவா?" என்று கூறியுள்ளார்.