ஓபிஎஸ்-க்கு போட்டியாக சபாநாயகருக்கு கடிதம் எழுதிய இபிஎஸ்

Tamil nadu ADMK AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Oct 11, 2022 09:17 PM GMT
Report

ஓபிஎஸ் சபாநாயகருக்கு அதிமுக தொடர்பாக தன்னை ஆலோசிக்காமல் முடிவெடுக்க கூடாது என கடிதம் எழுதிய நிலையில் எடப்பாடி பழனிசாமியும் கடிதம் எழுதியுள்ளார்.

ஓபிஎஸ்-க்கு போட்டியாக சபாநாயகருக்கு கடிதம் எழுதிய இபிஎஸ்

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் தொடர்ந்து ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர்.

ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சபாநாயகருக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தனர். இந்த நிலையில், இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு இரண்டாவது முறையாக கடிதம் எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும் என தெரிவித்திருந்தார்.

EPS wrote to the Speaker

இதனை தொடர்ந்து தற்போது ஈபிஎஸ் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்ற அடிப்படையில் அலுவல் ஆய்வுக்குழுவில் ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். சட்டமன்ற அதிமுக துணை கொறடா சு.ரவி, சட்டப்பேரவை செயலாளர் அலுவலகத்தில் கடிதத்தை வழங்கினார்.