தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் - ஓ. பன்னீர்செல்வம்

ADMK AIADMK Narendra Modi Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Jul 29, 2022 01:08 PM GMT
Report

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கு 

ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது.

அப்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பிடம் பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா இருதரப்பும் சமரசமாக செல்வதற்கு வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினார்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் - ஓ. பன்னீர்செல்வம் | O Panneerselvam Speech After Meet Pm Modi

அதற்கு வாய்ப்பே இல்லை என இரு தரப்பினரும் உறுதியாக பதில் அளித்தனர். அதனை தொடர்ந்து, ஜூலை பதினொன்றாம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழுவில் என்ன நடந்தது என்று ஓபிஎஸ் தரப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது கட்சி அடிப்படை விதிகளை மீறி அத்தனை முடிவுகளையும் பொதுக்குழுவில் எடுத்தனர் என தெரிவித்தனர்.

தொடர்ந்து அதிமுக பொது குழுவுக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றத்தை நாடுமாறும், வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்கும் அதுவரை தற்போது நிலையை தற்போதைய நிலையே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் பேட்டி 

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில், பிரதமரை வழியனுப்ப சென்ற ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

O.Panneerselvam

அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி என் உடல்நிலை எப்படி உள்ளது என கேட்டார். நன்றாக உள்ளது என தெரிவித்தேன்; உடல் நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ளவும் என கூறியதாகவும் கூறினார்.

அதன் பின் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அவர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என தெரிவித்துள்ளார்.