கமல்ஹாசன் அரசியல்வாதியே இல்ல.. பச்சோந்திய விட வேகமா.. விளாசிய ஈபிஎஸ்!
கமல்ஹாசன் அரசியல்வாதியே இல்லை என ஈபிஎஸ் விமர்சித்துள்ளார்.
கமல்ஹாசன்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள
மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அந்தந்த மாவட்ட செயலாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஈபிஎஸ் விமர்சனம்
வெள்ளம் வந்தபிறகு என்.எல்.சி.யில் இருந்து அதிக திறன் கொண்ட மோட்டார்களை தலைமைச் செயலாளர் கேட்டிருப்பது ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டை காட்டுகிறது. மழைநீர் வடிகால் பணிகள் முடிந்ததாக சொல்லிவிட்டு, தற்போது 50% பணிகள் மட்டுமே நிறைவடைந்திருப்பதாக கூறுவது ஏன்?
நடிகர் கமல்ஹாசனை தான் ஒரு அரசியல்வாதியாகவே கருதவில்லை. எதிர்வரும் நாடாளுமன்றத்தில் திமுக ஆதரவில் எம்.பி. ஆக. கமல் முயற்சிக்கிறார்.
பச்சோந்தியை விட விரைவாக நிறம் மாறும் தலைவர் கமல்ஹாசன்.மக்கள் நீதி மய்யம் கட்சியில் அவர் ஒருவர் மட்டுமே இருக்கிறார். எனவே, கமல்ஹாசனின் கருத்துக்கு செவி சாய்க்க தேவையில்லை என விமர்சித்துள்ளார்.