சென்னை வெள்ளம்: திமுக அரசு அதை செய்யாதது தான் காரணம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Tamil nadu DMK Chennai Edappadi K. Palaniswami Michaung Cyclone
By Jiyath Dec 09, 2023 02:39 AM GMT
Report

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை திமுக அரசு அலட்சியப்படுத்தியதால் தான் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி 

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை வெள்ளம்: திமுக அரசு அதை செய்யாதது தான் காரணம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! | Edappadi Palaniswami Blamed Dmk Government

தொடர்ந்து 5வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது "கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு முழு பொறுப்பு திமுக அரசுதான்.

புயல் மழைக்கு அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 நாட்கள் கடந்த பின்பும் தற்போது வரை பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை. 

[ZH39YOT

குளம்போல் தண்ணீர் 

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை திமுக அரசு அலட்சியப்படுத்தியதால் தான் கடும் பாதிப்பு. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தவேண்டும். தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த தேவையான ராட்சத மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருக்கவில்லை.

சென்னை வெள்ளம்: திமுக அரசு அதை செய்யாதது தான் காரணம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! | Edappadi Palaniswami Blamed Dmk Government

எங்கு பார்த்தாலும் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சிக் காலத்தில் மழைக்காலங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம். 2015ம் ஆண்டு புயல் பாதிப்பை அதிமுக அரசு திறமையாக சமாளித்தது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக.வுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.