மிக்ஜாம் புயல்: ஆந்திராவில் 10 மாவட்டங்கள் பாதிப்பு - மழையில் நடனமாடிய அமைச்சர் ரோஜா!
மிக்ஜாம் புயலால் ஆந்திராவில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அமைச்சர் ரோஜா மழையில் நடனம் ஆடியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மிக்ஜாம் புயல்
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை சென்னையை புரட்டிப்போட்டது. இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மிக்ஜாம் புயலானது ஆந்திர மாநிலத்தில் 110 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தது. இதனால் அம்மாநிலத்தின் 10 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆந்திராவின் சுற்றுலாத்துறை அமைச்சரான நடிகை ரோஜா களப்பணியில் ஈடுபட்டுள்ளார்.
ரோஜா நடனம்
இந்நிலையில் கனமழை பெய்த ஒரு பகுதியில் ரோஜா குடையைப் பிடித்தபடி மழையில் நடனமாடி ரசித்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி வைரலானதை அடுத்து, புயல் மழையால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும்போது அமைச்சர் மழையில் நடனம் ஆடியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேலும் தெலுங்கு தேசம் கட்சி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "கடந்த காலங்களில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார்.
அப்போது புயல் போன்ற இயற்கை பேரிடர் சமயத்தில் அமைச்சர்கள் அனைவரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தோம். ஆனால் ரோஜா மழையை ரசித்து நடனம் ஆடுகிறார்" என சாட்டியுள்ளது.
రైతులు పంట నాశనం అయి ఏడుస్తుంటే ఈమె వర్షంలో ఎంజాయ్ చేస్తుంది....?
— MalathiReddy 2.0 (@Malaathi_Reddi) December 5, 2023
మంత్రి కి తుఫాన్ ఇంత సరదాగా ఉంది…
ప్రజాసేవలో రోజా తరించిపోతున్నారు.. pic.twitter.com/NkHF84Afdr