கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன்; திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் - எடப்பாடி பழனிசாமி!
கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன், திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
அதிமுக 52வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) ஸ்பேஸில் உரையாற்றியதாவது "தென்மாவட்டங்களில் அதிமுகவை பலப்படுத்த வேண்டும். கட்சியை பலப்படுத்தும் பணியை பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
குடும்ப நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களுக்கு மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி தரப்படுகிறது. திமுக ஆட்சியில் சினிமா துறை ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சாதகனமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே சிறப்புக் காட்சிக்கு அனுமதி தரப்படுகிறது.
வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
பிறருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அக்டோபர் 30ம் தேதி தேவர் குருபூஜைக்கு நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளேன். தமிழ்நாட்டில் பல பிரச்சனையை வைத்து கொண்டு INDIA கூட்டணி அமைத்து நாட்டை காப்பற்ற போகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிளம்பிவிட்டார்.
கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதிமுக பார்த்து உங்களது பிரதமர் வேட்பாளர் யார் என்று கேள்வி கேட்கும் ஸ்டாலின் அவர்களே! INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று உங்களால் கூறமுடியுமா?” எனக் கேள்வி எடப்பாடி பழனிசாமி எழுப்பினார்.