கூட்டணி கூட்டணி என்கிறீர்களே..யாரு பிரதமர் வேட்பாளர்..? இபிஎஸ் கேள்வி

ADMK Edappadi K. Palaniswami Lok Sabha Election 2024
By Karthick Apr 04, 2024 02:43 PM GMT
Report

இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று கூற முடியுமா என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இபிஎஸ் பிரச்சாரம்

அதிமுக நீலகிரி வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அவர் பேசியது வருமாறு,

eps-asks-who-is-indi-alliance-pm-candidate

30 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் காரணத்தால் தான் தமிழகம் நாட்டில் முதன்மை மாநிலமாக மாறியுள்ளது. ஆனால், இன்றைய முதல்வர் நம்ப ஆட்சியை குறை கூறுகிறார். உங்களின் பொய்யும், புரட்டும் தமிழ்நாடு மக்களிடம் எடுபடாது. அவருடைய சகாக்கள் லஞ்சம் வாங்குகிறார்கள். இந்த ஆட்சி இருக்க வேண்டுமா...?

இபிஎஸ் பிரதமராவதற்கு வாய்ப்புள்ளது - பாய்ண்ட் சொல்லும் ராஜன் செல்லப்பா

இபிஎஸ் பிரதமராவதற்கு வாய்ப்புள்ளது - பாய்ண்ட் சொல்லும் ராஜன் செல்லப்பா

கருணாநிதி, ஸ்டாலின், இப்போ உதயநிதி...வாரிசு அரசியல்...இது என்ன மன்னர் ஆட்சியா..? அதனை தடுத்து நிறுத்த வேண்டும். அப்போது தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்.

பிரதமர் வேட்பாளரை

இரட்டை வேடம் போடும் ஒரே கட்சி திமுக தான். துடிக்கிறார்கள் இந்தியா கூட்டணி இந்தியா கூட்டணி என்று..யாரு பிரதமர் வேட்பாளர் என்று கூற முடியுமா..? சொல்ல முடியுமா..? 2019-இல் நிகழ்ச்சிக்காக வந்த ராகுல் காந்தியை ஸ்டாலின் தான் பிரதமர் வேட்பாளர் என கூறினார்.

மோடி அமித் ஷா யாரு வந்தாலும் அங்கு மாப்பிள்ளை நாங்க தான் - செல்லூர் ராஜு

மோடி அமித் ஷா யாரு வந்தாலும் அங்கு மாப்பிள்ளை நாங்க தான் - செல்லூர் ராஜு

இவர் கூறியதன் விளைவு காங்கிரஸ் எதிர்க்கட்சி கூட ஆக முடியவில்லை. மேற்குவங்கத்தில் மமதா கூட்டணி இல்லை என்கிறார். ஆம் ஆத்மீ பஞ்சாப்பில் கூட்டணி இல்லை என்கிறது.

eps-asks-who-is-indi-alliance-pm-candidate

கேரளாவில் இடதுசாரிகள் எதிர்க்கிறது. இவரு மட்டும் தான் கூட்டணி கூட்டணி என பேசுகிறார். எம்.பி வேட்பாளருகே பிரச்சனை, இவர்கள் எப்படி பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். சொல்ல முடியுமா பிரதமர் வேட்பாளர் யார் என்று..? தமிழ்நாடு மக்கள் எங்கள் மக்கள், அவர்களின் வளர்ச்சிக்காக இருப்பது தான் எங்களது நிலைப்பாடு. நாங்கள் ஆட்சி, அதிகாரத்திற்கு ஆசைப்பட்டிருந்தால் பாஜக கூட்டணியிலேயே நீடித்திருப்போம். எங்களுக்கு மக்கள் தான் முக்கியம்.