மோடி அமித் ஷா யாரு வந்தாலும் அங்கு மாப்பிள்ளை நாங்க தான் - செல்லூர் ராஜு
தேர்தல் எனும் கல்யாண நிகழ்ச்சிக்கு பிரதமர், அமித்ஷா போன்றவர்கள் வருவார்கள். ஆனால், மாப்பிள்ளை அதிமுகதான் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழகம் வருகை
நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த பாஜக கடும் முன்னைப்புக்ளை ஏற்படுத்தியுள்ளது. திராவிட கட்சிகள் இல்லாத கூட்டணியை அமைத்து நட்சத்திர வேட்பாளர்களை இறக்கி தேர்தல் பரப்புரையில் அக்கட்சி தீவிரம் காட்டி வருகின்றது.
நாட்டில் முதல் தேர்தலாக தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் சூழலில் பிரச்சாரத்திற்காக தேசிய தலைவர்கள் தமிழகம் நோக்கி வருகை தந்து வருகின்றனர். நாட்டின் பிரதமர் மோடி வரும் 9-ஆம் தேதி முதல் 4 நாள் பயணமும், நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரவுள்ளார்.
மாப்பிள்ளை எங்க ஆளு தான்
இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் நாளை (04.04.2024) மதுரை வரவுள்ளதை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், யார் வேண்டுமானாலும் வரட்டும். மோடி ஜி, அமித் ஷா யாரு இங்க வந்தாலும், இங்க மாப்பிள்ளை எங்க ஆளு தான்(அதிமுக வேட்பாளர் சரவணன்) என் பதிலளித்தார்.