போன் ஆடியோ எடுக்க தெரியுது.? அந்த மேதாவி இத எப்படி படிக்காம விட்டாரு - செல்லூர் ராஜு சரமாரி கேள்வி
கச்சத்தீவு விவகாரம் தமிழக தேர்தல் பிரச்சாரத்தின் மையப்பகுதியாக மாறியுள்ளது.
கச்சத்தீவு விவகாரம்
நாட்டின் பிரதமர், வெளியுறவு துறை அமைச்சர் முதல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பல பாஜக தலைவர்களும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு குறித்து பேசியிருப்பது பெரும் அதிர்வலைகளை தமிழக அரசியலில் ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இந்த விவகாரத்தில் திமுக, அதிமுக, நா.த.க என தமிழகத்தின் பிரதான கட்சிகள் பலவும் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றன. இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பதில் வருமாறு,
மெத்த படிச்ச மேதாவி
அவருக்கு என்ன தெரியும். 10 வருடங்கள் ஆட்சியில் இருந்து விட்டு RTI'யில் கேட்டு பேசினாராம். எல்லாம் தெரிஞ்ச மெத்த படிச்ச மேதாவி இருக்கிறார்கள். 2006-இல் அதிமுக சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தினோம்.
அப்போதே முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் கொச்சையாக மீன் அதிக சுவையாக இருக்கும் என்ற காரணத்தால் அவர்கள் அங்கு சென்று மீன் பிடிக்கும் போது, பூ போட்டு வரவேற்பார்களா..? குண்டு தான் போடுவார்கள் என சொன்னார்.
அவரு தான் 1974-இல் கச்சத்தீவை கொடுத்ததற்கு காரணம். அதனையெல்லாம் தோலுரித்து காட்டியவர் ஜெயலலிதா தான்.
எல்லாம் படித்த மெத்த படிச்சா மேதாவி இத எப்படி படிக்காம விட்டாரு.
இதற்கு RTI வேண்டுமா..? ஆடியோ எடுக்க முடியுது - இத எடுக்கமுடியவில்லையா..? மீனவ சமுதாயம் பாதிக்கப்படுவதை முன்னாடியே மோடியிடம் கூறி நடவடிக்கை எடுத்திருக்கலாமே...?
அதிமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது தெரியாதா..? இப்போ வந்து மீனவர்களின் வாக்குகளுக்காக இத மாதிரி ஒரு நாடகம் நடத்துகிறார்கள் என்றால் அது பெரிய பொய்.