கச்சத்தீவு விவகாரம் - என்ன 20 ஆயிரம் புக் படிச்சாரோ...அண்ணாமலை LKG student - ஜெயக்குமார்
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் களம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கச்சத்தீவு விவகாரம்
முன்னாள் மத்திய அரசு காங்கிரஸ், திமுக தான் கச்சத்தீவு உரிமை இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் துவங்கி, நாட்டின் பிரதமர் மோடி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர் ஆகியோர் பேசியிருப்பது தேசிய அளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசியல்வாதிகள் பெரும் தாக்குதலை பாஜக அரசு மீது வைத்து வருகிறார்கள். திமுக, அதிமுக, காங்கிரஸ், நா.த.க என கட்சியினரும் தேர்தல் நேரம் என்பதால் கச்சத்தீவு குறித்து பாஜகவினர் பேசுவதாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.
LKG ஸ்டுடன்ட்
இந்நிலையில், கச்சத்தீவு குறித்து RTI மூலம் விவரம் தெரிந்து கொண்டதாக அண்ணாமலை கூறியதை குறித்து செய்தியாளர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தது வருமாறு,
அவருக்கு வரலாறு தெரியாது. கிட்டத்தட்ட 20 ஆயிரம் படிச்சேன்'னு சொல்றாரு..ஒரு நாளைக்கு ஒரு புக் படிச்சா கூட எவ்ளோ நாள் ஆகும். என்ன 20 ஆயிரம் புக் படிச்சாரோ...
RTI கொண்டுவந்ததே அம்மா அரசு தான். அந்த சட்டத்தை வைத்து கேட்டுக்கேட்டு தெரிந்து கொள்பவர்...அரசியல் தெரியாதவர், அரசியலில் ஒரு கத்துக்குட்டி இப்போ தான் அரசியலில் LKG ஸ்டுடன்ட்....அவருக்கு அரசியலில் ஒன்னுமே தெரியாது
இவ்வாறு ஜெயக்குமார் பேசியுள்ளார்.