நானும் காசிமேடு தான் கொச்சையா பேச எனக்கு தெரியாதா..? கொந்தளித்த ஜெயக்குமார்
வேட்பாளர் மனுதாக்கல் செய்வதில் இன்று அமைச்சர் சேகர் பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோருக்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம்
வடசென்னை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய ஒரே நேரத்தில் திமுக - அதிமுக வேட்பாளர்கள் சென்ற நிலையில், இருதரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது வருமாறு,
ஆளும் கட்சி முழு அதிகாரத்தை பயன்படுத்தி அதிகார துஷ்ப்ரயோகம் செய்கிறார்கள். நாங்க 7-வது டோக்கன், அவர்கள் 8-வது டோக்கன்..அப்படி பார்த்தாலும் நாங்கள் தான் முன்னாடி வந்தோம்.
தேர்தல் நடக்காது தம்பி...RO'வை எப்படியாவது அவர்கள் பக்கம் இழுக்கவேண்டும் என முயற்சித்தார்கள். அவுங்க culture அப்படி தான். முறையாக - சரியாக நடந்துக்கணும்'னு நாங்க RO கிட்ட பேசினோம்.
நானும் காசிமேட்டுல
அவுங்களுக்கு மட்டும் தான் கொச்சையாக பேச தெரியுமா..? எனக்கு தெரியாதா..? நானும் காசிமேட்டுல பிறந்தவன் தான். மேடை போடுங்க பேசலாம். பினாமி பேருல ஏன் டோக்கன் போட்டீங்க...
வேறு ஒருவரோட டோக்கனில் வந்தது proxy இல்லையா. எங்க கிட்ட மட்டும் candidate வந்தா மட்டும் தான் டோக்கன் தருவோம்'னு சொல்லி ...அவுங்க மட்டும் எப்படி வந்தாங்க டோக்கன் முன்னாடி கொடுத்தாங்க'னு சொன்ன தேர்தல் ஆணையம் தான் தப்பு பண்ணுது...
சட்டத்தை காத்துல விட்டுட்டு அவுங்க இப்படிலாம் பண்றாங்க எப்போதும் எங்க உரிமையை நாங்க ஏன் விட்டுக்கொடுக்கணும் ....cheating பண்ணவங்கல போய் இதெல்லாம் கேளுங்க.
இவ்வாறு அவர் பேசினார்.