இபிஎஸ் பிரதமராவதற்கு வாய்ப்புள்ளது - பாய்ண்ட் சொல்லும் ராஜன் செல்லப்பா

ADMK Madurai Edappadi K. Palaniswami TTV Dhinakaran
By Karthick Apr 04, 2024 09:43 AM GMT
Report

அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமராக வர வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

டிடிவி கேள்வி

அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை குறித்து மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்ட டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்தார். பாஜகவின் கூட்டணி தரப்பில் அண்ணாமலை, தமிழிசை போன்ற தலைவர்கள் போட்டியிடும் சூழலில், அதிமுகவின் தலைவர்கள் இபிஎஸ், தங்கமணி ஏன் போட்டியிட பயப்படுகிறார்கள் என விமர்சித்திருந்தார்.

eps-will-become-pm-admk-mla-rajan-chellappaa

இதற்கு இன்று மதுரையில் அதிமுகவின் வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசியது வருமாறு,

மிரட்டும் திமுகவினர் - மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தினால் சும்மா விட மாட்டேன் - இபிஎஸ் திட்டவட்டம்

மிரட்டும் திமுகவினர் - மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தினால் சும்மா விட மாட்டேன் - இபிஎஸ் திட்டவட்டம்

இபிஎஸ் பிரதமராவதற்கு

எடப்பாடியார் எதுக்கு MP'க்கு நிற்கணும்... அவசியமே இல்லை. ஒருவேளை அண்ணாதிமுக 40 இடங்களையும் வென்று இந்தியா முழுவதும் சின்ன சின்ன கட்சிகள் ஜெயித்தால், கூட்டணி ஆட்சியில் பிரதமராக ராஜ்ய சபா எம்.பி'யாக எடப்பாடி வருவார்.

eps-will-become-pm-admk-mla-rajan-chellappaa

தேவையில்லாமல் டிடிவி வம்பு இழுக்கிறார். அனைத்து மாநில கட்சிகளும் சேர்ந்து எடப்பாடியார் அரசியல் ராஜதந்திரம் மிக்கவர், திறமையானவர் என்பதை உணர்ந்து எப்படி தேவகவுடா, சந்திரசேகர் பிரதமர் ஆனார்களோ அப்படி எடப்பாடியை பிரதமராக்க விரும்பினால் அப்போது அவர் ராஜ்ய சபா எம்.பி ஆவார். நீங்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்கிறீர்கள் என்றால் நாங்களும் போட்டுக்கொள்ள வேண்டுமா என்ன..?