ஆப்ரேஷன் செய்து கொண்ட இளவரசி கேட் எங்கே? அரச குடும்பத்தில் பரபரப்பு!
இளவரசி கேட் மிடில்டன் எங்கே என்ற கேள்விதான் உலா வந்த வண்ணம் உள்ளது.
கேட் மிடில்டன்
பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ் இளவரசர் வில்லியம். இவரது மனைவி கேட் மிடில்டன். திருமணமாகி கென்சிங்டன் அரண்மனையில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இளவரசி கேத் மிடில்டன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து, வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
தொடர்ந்து, பொதுமக்கள் உடன் நெருக்கம் காண்பிக்க கூடிய கேட் சமீப காலமாக எங்கும் தோன்றாமல் இருக்கிறார். இதனால், அறுவைசிகிச்சைக்கு பிறகான உடல்ரீதியான சிக்கல் காரணமாக கேட் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது.
கிளம்பும் சர்ச்சை
"மூன்று குழந்தைகளுக்கு தாயான கேத், பிரசவத்துக்கு பின், குழந்தை பிறந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு மருத்துவமனைக்கு வெளியே ஒரு சூப்பர்மாடலைப் போல போஸ் கொடுத்த ஒரு பெண்மணி. அவர் தனது முகத்தை வெளியில் காண்பிக்காமல், சிகிச்சை எடுக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?" என்று எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவு 6 மில்லியனுக்கும் அதிக பார்வைகளைப் பெற்றுள்ளது.
அதில் பலர் கேட் மிடில்டன் காணவில்லை எனப் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த கேள்விதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.