அரசர் சார்லஸ், இளவரசிக்கு உடல்நலக் கோளாறு; அறுவைச் சிகிச்சை - தற்போதைய நிலை என்ன?

England King Charles III
By Sumathi Jan 18, 2024 09:00 AM GMT
Report

இளவரசி கேட் மிடில்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசர் மற்றும் இளவரசி

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன். இவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

king charles with kate middleton

இதுகுறித்த கென்சிங்டன் அரண்மனையின் அறிக்கையில், இளவரசி கேட் மிடில்டனுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்றும், அடுத்த 10 முதல் 14 நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவு

இந்நிலையில், சில மாதங்களாக அரசர் மூன்றாம் சார்லஸ் புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இதனால், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை செய்தி வெளியிட்டுள்ளது.

அரசர் சார்லஸ், இளவரசிக்கு உடல்நலக் கோளாறு; அறுவைச் சிகிச்சை - தற்போதைய நிலை என்ன? | King Charles Kate Middleton Hospitalisation

இதை தொடர்ந்து, அரசர் சார்லஸ் பங்கேற்க இருந்த பல நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.