காலரைப் பிடித்து அடித்து கீழே தள்ளினார் வில்லியம் - இளவரசர் ஹாரி பகீர் தகவல்!

Prince Harry Prince William England
By Sumathi Jan 06, 2023 06:38 AM GMT
Report

சகோதரர் வில்லியம் என்னை அடித்து காயப்படுத்தியதாக இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார்.

இளவரசர் ஹாரி 

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் சுயசரிதையான 'ஸ்பேர்' வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், தி கார்டியன் ஊடகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

காலரைப் பிடித்து அடித்து கீழே தள்ளினார் வில்லியம் - இளவரசர் ஹாரி பகீர் தகவல்! | Prince Harrys Shocking Revelation About William

அதில்,2019 ஆம் ஆண்டு இளவரசர் வில்லியமின் முன்னாள் மனைவி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்லே பற்றிய வாக்குவாதத்தின் போது, ​​வில்லியம் , இளவரசர் ஹாரியை தாக்கியதாக தெரிகிறது.

பகீர் தகவல் 

"எல்லாம் மிக வேகமாக நடந்தது. அவர் என் காலரைப் பிடித்து, என் நகையோடு பிடித்து இழுத்து தரையில் தள்ளினார். நான் நாய்க்கு தீனியிடும் கிண்ணத்தில் விழுந்தேன். அது உடைந்து என்னை காயப்படுத்தியது.

முதுகில் காயம் ஏற்பட்டது. நான் ஒரு கணம் அங்கேயே படுத்து, கொஞ்சம் தெளிந்த பின்னர் எழுந்து வந்தேன்" என்று இளவரசர் ஹாரி தனது புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புத்தக பகுதியை அடிப்படையாக வைத்து 6 பக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக அமைதியாக இருந்த ஹாரி மற்றும் வில்லியமின் முன்னாள் மனைவி மேகன், கடந்த மாதம் நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத்தில் பிரிட்டிஷ் அரச குடும்பத்துடனான தங்கள் கசப்பான அனுபவங்களை வெளிப்படையாக பேசியுள்ளனர்.