கேட் மிடில்டனை அழவைத்த அந்த தருணம்! மேகனின் முகத்திரை அம்பலமானது
இளவரசர் ஹரி- மேகன் தம்பதியின் ஓப்ரா வின்ஃப்ரே உடனான நேர்காணலில் முழுக்க முழுக்க மேகன் மெர்க்கல் இளவரசர் வில்லியம் மனைவி கேட் மிடில்டனை குறிவைத்துள்ளதாகவே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. நூற்றாண்டின் மிகப்பெரிய நேர்காணலாக கருதப்படும் இளவரசர் ஹரி-- மேகன் தம்பதிகளின் கலந்துரையாடல் உண்மையில் மேகன் மெர்க்கலின் முகத்திரையை அம்பலப்படுத்தியுள்ளதாகவே கூறப்படுகிறது.
பிரித்தானிய அரண்மனையில் தம்மீது பாகுபாடு காட்டப்பட்டதாகவும், இனரீதியான கேள்வியை எதிர்கொள்ள நேர்ந்ததாகவும் கூறும் மேகன் மெர்க்கல், அரச குடும்பத்தில் இருதும் பிரித்தானியாவில் இருந்தும் வெளியேறியதன் உண்மையான காரணத்தை சொல்லாமல் சொல்லியதாக கூறப்படுகிறது. இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேட் மிடில்டன் மற்றும் ஹரி ஆகிய மூவரும் நெருக்கமான பந்தத்தை கொண்டிருந்தவர்கள்.
இளவரசர் ஹரி தொடர்பில் அதிக அக்கறை கொண்டிருந்தவர் கேட் மிடில்டன், மட்டுமின்றி அண்ணனின் மனைவி என்பதைவிடவும் ஒரு சகோதரியாகவும் சிறந்த தோழியாகவுமே இளவரசர் ஹரி கேட் மிடில்டனை பாவித்து வந்துள்ளார். இந்த மூவர் அணியிலேயே மேகன் மெர்க்கல் புதிதாக இணைந்துள்ளார்.
இளவரசர் ஹரி தாம் காதலில் விழுந்த கதையை தெரியப்படுத்தியதும் அதில் மிகவும் மகிழந்தவர்கள் வில்லியம்- கேட் தம்பதிகளே. மேகன் தொடர்பில் வில்லியம்- கேட் தம்பதிக்கு அச்சம் இருந்தாலும், குறுகிய காலத்திலேயே மூவர் அணி நால்வர் அணியாக மாறியுள்ளது. ஆனால் சில மாதங்களிலேயே இந்த நால்வர் அணியின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்தது.
தொடர்ந்து, சகோதரர்கள் இருவரின் இடையே வாக்குவாதம், கடும் வார்த்தைகள், கண்ணீர் என மொத்த தகவலும் அம்பலமானது. ஹரி- மேகன் திருமணம் முடிந்து 6 மாதங்களில் இன்னொரு அதிர்ச்சி தகவல் வெளியானது.
அதில், வருங்காலத்தில் பிரித்தானிய ராணியாக வாய்ப்பு கொண்ட கேட் மிடில்டனை மேகன் மெர்க்கல் அழ வைத்தார் என்பதே. அந்த சம்பவமே உண்மையில் மேகன் மெர்க்கலின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறப்படுகிறது. கேட் மிடில்டனிடம் இருந்து அதன் பின்னர் மேகன் மெர்க்கலுக்கு உரிய அரவணைப்பு கிட்டாமல் போனது.
அதன் தொடர்ச்சியாக மேகன் மெர்க்கல் நடந்துகொண்ட விதம், அவருக்கே கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. கேட் மிடில்டன் அனுப்பிய பூக்களை பயன்படுத்தாமல் குப்பையில் கொட்டியதும், முகத்தில் அறைவது போன்று கதவை சாத்தியதும் செய்திகளாக வெளியானது. இது அனைத்தும் கேட் மிடில்டனுக்கு இளவரசர் ஹரியுடன் இருக்கும் நட்பு ரீதியான பாசத்தால் மேகன் மெர்க்கலுக்கு ஏற்பட்ட ஒருவகை பொறாமை என்றே கூறப்படுகிறது.
மேகன் மெர்க்கல் உற்சாகமாகவும் வெளிப்படையாகவும் பேசும் குணம் கொண்டவர் என்றால், கேட் கருணையுள்ளவர், வித்தியாசமானவர் என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி கேட் மிடில்டன் பல ஆண்டுகள் காத்திருக்க வைத்த பின்னரே இளவரசர் வில்லியத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
சுமார் 8 ஆண்டுகள் பழகிய பின்னரே இளவரசர் வில்லியத்தை கேட் மிடில்டன் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் மேகன் மெர்க்கலின் நிலை அப்படி அல்ல.