ஹோட்டலில் முகம் சுழிக்க வைத்த தம்பதியின் செயல் - சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி!
உணவக நிர்வாகத்திடம் பணம் கேட்கும் ஜோடியின் வீடியோ வைரலாகி வருகிறது.
தம்பதியின் செயல்
இங்கிலாந்து, பிளாக்பர்ன் நகரில் ஒரு ஹோட்டலுக்கு 32 வயது மதிக்கத்தக்க பெண் தனது கணவருடன் சாப்பிட வந்துள்ளனர். இவர்கள் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் தம்பதி தங்களுக்குள் ஏதோ பேசி கொள்கின்றனர்.
பின்னர் அந்த பெண் தனது தலை முடியை பிடுங்கி பாதி சாப்பிட்ட உணவில் போட்டு விட்டு, உணவக நிர்வாகத்தை அழைத்து தங்களது பணத்தை திருப்பி கேட்கிறார். வேறு வழியில்லாமல் அந்த பெண்ணின் உணவுக்கான பில் தொகையை உரிமையாளர் திருப்பிச் செலுத்தி உள்ளார்.
மனித எலும்பை பொடியாக்கி மருமகளுக்கு கொடுத்து சாப்பிட கட்டாயப்படுத்திய மாமியார், கணவர் - திடுக்கிடும் தகவல்
அதிர்ச்சியில் நிர்வாகம்
அதன்பின், உரிமையாளர் என்ன நடந்தது என சிசிடிவியை ஆராய்ந்ததில், பில் தொகையை ரீபண்ட் பெறுவதற்காக அந்த பெண் செய்த தந்திரம் அம்பலமாகியுள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர், சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, நாம் யாரும் இப்படிப்பட்ட செயலை செய்யக்கூடாது. இது போன்ற மனிதர்களால் உணவகங்களின் நற்பெயர் பாதிக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.