மனித எலும்பை பொடியாக்கி மருமகளுக்கு கொடுத்து சாப்பிட கட்டாயப்படுத்திய மாமியார், கணவர் - திடுக்கிடும் தகவல்
குழந்தை இல்லாத காரணத்திற்காக மனித எலும்பை கொண்டு தயாரிக்க பட்ட ஒரு விதமான பொடியை சாப்பிட சொல்லி மாமியார் கட்டாய படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருமகளை கட்டாயப்படுத்திய மாமியார்
புனேவில் மருமகளுக்கு குழந்தையில்லாததால் மனித எலும்பால் ஆன பொடியையை கொடுத்து கணவர் மற்றும் மாமியார் சாப்பிட வற்புறுத்தியதாக காவல்நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து, அந்த பெண் சிங்காட் போலீஸ் நிலையத்தில் கணவர், மாமியார், சாமியார் உள்பட ஏழு பேர் மீது புகார் கொடுத்த நிலையில். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்துள்ள புகாரில் மாமியார் பாதிக்கப்பட்ட பெண்ணை மராட்டிய கொங்கன் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார்கள் என்றும். அங்கு அவர் ஒரு நீர்வீழ்ச்சியின் கீழ் (அகோரி) பயிற்சியில் ஈடுபட கட்டாயப்படுத்தினர் என்றும் அந்த பெண் கூறி உள்ளார்.
கைது நடவடிக்கை தீவிரம்
இது குறித்து போலீசார் தரப்பில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம், அதன் பிறகே சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பம், நன்கு படித்தவர்கள், ஆனாலும் கூட இதுபோன்ற முட்டாள் தனம் ஆனா செயல்களை செய்துள்ளனர்.