மாட்டிறைச்சி சாப்பிட மிரட்டிய மனைவி - கணவர் எடுத்த பகீர் முடிவு!

Gujarat Crime Death
By Sumathi Aug 30, 2022 07:58 AM GMT
Report

மனைவி, கணவரை மாட்டிறைச்சியை சாப்பிட வைத்ததால் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கணவர் தற்கொலை

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரோஹித். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

மாட்டிறைச்சி சாப்பிட மிரட்டிய மனைவி - கணவர் எடுத்த பகீர் முடிவு! | Hindu Man Dies By Suicide Because Of Ate Beef

இந்நிலையில், தற்போது ரோஹித் பிரதாப் சிங்கின் மனைவி மற்றும் மைத்துனரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்கொலைக்கு முன்பு, அவர் எழுதிய கடிதத்தையும், அவரது சமூக வலைத்தள பக்கத்தில் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

மிரட்டிய மனைவி

"நான் இந்த உலகத்தை விட்டுச் செல்கிறேன். எனது மரணத்திற்குக் காரணம் எனது மனைவி சோனம் அலி மற்றும் அவரது சகோதரர் அக்தர் அலி தான். அவர்களுக்கு உரியத் தண்டனையை எனது நண்பர்கள் பெற்றுத் தர வேண்டும். அவர்கள் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர்.

மாட்டிறைச்சி சாப்பிட மிரட்டிய மனைவி - கணவர் எடுத்த பகீர் முடிவு! | Hindu Man Dies By Suicide Because Of Ate Beef

மேலும், மாட்டிறைச்சியையும் ஊட்டினர். இனி இந்த உலகில் வாழ எனக்குத் தகுதி இல்லை. அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ரோஹித் பிரதாப் சிங் தாயார் வானிதேவி

தற்கொலை கடிதம்

தனது பிள்ளையின் தற்கொலைக்கு சோனம் அலி மற்றும் சகோதரர் அக்தர் அலி தான் காரணம் என போலீஸில் புகார் அளித்தனர். தற்கொலை கடிதத்தைக் கைப்பற்றிய போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.

ரோஹித் ராஜ்புத் மற்றும் சோனம் இருவரும் குஜராத்தின் சூரத்தில் ஒன்றாக பணிபுரிந்தனர். மேலும் இருவரும் பழகி காதலிக்கத் தொடங்கினர். சோனம் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் ரோஹித்தின் குடும்பத்தினர் சம்மதிக்க மறுத்துள்ளனர்.

ஆனால், அனைவரது எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்துள்ளனர். இதனால் அவருக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்பு இல்லாதது குறிப்பிடத்தக்கது.