விசிக துணைப் பொதுச் செயலாளர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை - பரபரப்பு!
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆதவ் அர்ஜுனா
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'வெல்லும் ஜனநாயகம்' என்ற மாநாடு சமீபத்தில் திருச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் VOICE OF COMMONS என்ற அரசியல் வியூகம் வகுக்கும் நிறுவனத்தின் தலைவர் ஆதவ் அர்ஜுனா விசிகவில் இணைந்தார்.
சில வாரங்களில் அவருக்கு விசிகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இது அரசியல் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை
இந்த சோதனை ஆதாவ் அர்ஜுனா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் நடத்தப்படுகிறது. மேலும், கோவையில் ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டில் 2 முறை வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆதவ் அர்ஜுனா வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.