என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை; அதிகாலையில் பயங்கரம்!

Chennai Death
By Sumathi Oct 12, 2023 03:41 AM GMT
Report

பிரபல கூலிப்படை தலைவன் உள்ளிட்ட இரண்டு ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

என்கவுன்டர்

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அதிமுக ஊராட்சி தலைவர் பார்த்திபன் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை; அதிகாலையில் பயங்கரம்! | Encounter Cholavaram Police Action

இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முத்து சரவணன் என்ற பிரபல ரவுடியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சோழவரம் அருகே உள்ள புதூர் மாரம்பேடு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

2 ரவுடிகள் உயிரிழப்பு

அதன்பேரில், அங்கு சென்றதில் அவருடன் சண்டே சதீஷ் என்ற மற்றொரு ரவுடியும் இருந்துள்ளார். இருவர்களையும் பிடிக்க முயன்ற போது தப்பிக்க முயன்றதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை; அதிகாலையில் பயங்கரம்! | Encounter Cholavaram Police Action

இதில், அவருடன் சண்டே சதீஷ் என்ற மற்றொரு ரவுடியும் இருந்துள்ளார். இருவர்களையும் பிடிக்க முயன்ற போது தப்பிக்க முயன்றதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

என்கவுண்டர் வழக்கு முதல் மத்திய அமைச்சர் வரை : அமித்ஷாவின் அரசியல் வரலாறு

என்கவுண்டர் வழக்கு முதல் மத்திய அமைச்சர் வரை : அமித்ஷாவின் அரசியல் வரலாறு

அதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மூன்று காவலர்கள் காயமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.