பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்ட்டர் ஏன்? சினிமாவை மிஞ்சிய பரபரப்பு தகவல்.!

encounter neeravimurugan
By Irumporai Mar 16, 2022 11:09 AM GMT
Report

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பிரபல ரவுடி நீராவி முருகன் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி நீராவி முருகனை, திண்டுக்கல் தனிப்படை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்தனர்.

தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் மீது கொலை வழக்கு உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தூத்துக்குடியில் உள்ள புதியம்பத்தூர் பகுதியில் உள்ள நீராவிமேடு என்ற தெருவில் வசித்து வந்ததால், ரவுடி முருகன் நீராவி முருகன் என அழைக்கப்பட்டு வந்துள்ளார்.

பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்ட்டர் ஏன்?  சினிமாவை மிஞ்சிய பரபரப்பு தகவல்.! | Rowdy Neeravi Murugan Encounter

இவர். குறிப்பாக திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை செய்யப்பட்ட வழக்கில் நீராவி முருகன் குற்றவாளியாக இருந்தார்

இந்த நிலையில் ரவுடி நீராவி முருகன் என்கவுன் டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரவுடி நீராவி முருகன் மீது ஏன் என்கவுண்டர் நடத்தப்பட்டது என்பது குறித்து காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நெல்லை எஸ்.பி சரவணன் கூறுகையில், திண்டுக்கல்லில் நடந்த கொள்ளை வழக்கில் நீராவி முருகனை போலீசார் பிடிக்க முயன்ற போது, போலீசாரை நீராவி முருகன் தாக்கினார்.

தற்காப்புக்காக நீராவி முருகனை போலீசார் ஒருமுறை சுட்டனர். நீராவி முருகன் அரிவாளால் வெட்டியதில் 4 போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதுஎனக் கூறினார்.