மேல் அதிகாரி கொடுத்த டார்சல்.. 45 நாட்களாக தூக்கிமின்றி ஊழியர் எடுத்த விபரித முடிவு!
பணியில் மேல் அதிகாரி கொடுத்த நெருக்கடியால் மன அழுத்தம் ஏற்பட்டு ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மன அழுத்தம்
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தருண் சக்சேனா. 42 வயதாகும் இவர் அங்குள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் ஏரியா மேனேஜராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மேகா என்ற மனைவியும் , இரண்டு குழந்தைகளும் உள்ளனர் .
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்துத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார் .
அதில் மேல் அதிகாரிகள் வேலை சார்ந்து கடும் நெருக்கடி கொடுப்பதால் கடும் மன அழுத்தம் ஏற்பட்டு 45 நாட்களாக தூக்குமின்றி தவிப்பதாகவும் அதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தன் தற்கொலை குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
தற்கொலை
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மேகா தன்னுடைய கணவரின் தற்கொலைக்கு, அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளே காரணம் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் , “மேல் அதிகாரிகள் என்கணவருக்கு எட்ட முடியாத இலக்குகளை நிர்ணயித்து மனரீதியாக சித்தரவை செய்துள்ளனர்.கடன் வசூலில் இலக்கை எட்டாவிட்டால் வேலையை விட்டு நீக்கிவிடுவதாகத் தினமும் மிரட்டி வந்துள்ளனர்.
இதனால், ஏற்பட்ட மன அழுத்தத்தால் என் கணவர் கடந்த 45 நாட்களாகத் தூங்கவே இல்லை. அவருடைய தற்கொலைக்கு அந்த மேல் அதிகாரிகளே காரணம்.அவர்கள் மீது நடவடிக்க எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் மேலாளர் பிரபாகர் மிஸ்ரா மற்றும் தேசிய மேலாளர் வைபவ் சக்சேனா மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.