லீக் ஆன அந்தரங்க வீடியோ..பதறி போன பெண் புகார் - அம்பலமான பகீர் பின்னணி!
பெண் ஒருவர் தனது அந்தரங்க வீடியோ இனையத்தில் கசிந்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.
அந்தரங்க வீடியோ
மும்பையில் ஒரு பெண் தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை நபர் ஒருவர் இணையத்தில் பதிவேற்றியதுடன், தன்னை மிரட்டியதாகவும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் ஜோசுவா பிரான்சிஸ் என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பல திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என சொல்லப்படுகிறது.
எனவே அவ்வப்போது கணவன் மனைவி இடையே சின்ன சின்ன விஷயத்துக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிரமடைந்த கணவர் தன் மனைவியை அவமானப்படுத்த அவர்கள் அந்தரங்கமாக இருக்கும் தருணங்களை புகைப்படம், வீடியோ எடுத்துள்ளார்.
பகீர் பின்னணி
மேலும், அந்த வீடியோ, புகைப்படங்களை அவர் தனது நண்பர் ஜோசுவா பிரான்சிஸ் இடம் கொடுத்துள்ளார். பின்னர் பிரான்சிஸ் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து அவரது அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஒரு ஆபாச இணையதளத்தில் பதிவேற்றியதாக தெரிவித்து அதன் URL ஐ பகிர்ந்துள்ளார்.
இந்த அந்தரங்க வீடியாக்களை நீக்க வேண்டும் என்றால் 50,000 ரூபாய் பணம் தரவேண்டும் என்று மிரட்டி அந்த பெண்ணிடம் இருந்து பிரான்சிஸ் பணம் வாங்கியுள்ளார். இருப்பினும் அந்த அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சில நாட்களுக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் பரவ தொடங்கியுள்ளது.
இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.