மகளின் அந்தரங்க வீடியோக்களை பரப்பிய தந்தை - மனமுடைந்து பெண் செய்த காரியம்!

Karnataka India
By Jiyath Jul 14, 2024 08:11 AM GMT
Report

மகளின் அந்தரங்க வீடியோக்களை அவரது தந்தையே இணையத்தில் பரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

அந்தரங்க வீடியோ

கர்நாடக மாநிலத்தில் 18 வயது மகளின் அந்தரங்க வீடியோக்களை அவரது தந்தையே சமூக வலைதளங்களில் பரப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தையின் இந்த செயலால் மகள் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மகளின் அந்தரங்க வீடியோக்களை பரப்பிய தந்தை - மனமுடைந்து பெண் செய்த காரியம்! | Father Who Spread His Daughters Intimate Videos

தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, பெண்ணின் தாயார் தனது கணவர் குறித்த்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், "தனது மகள் உறவினர் ஒருவரின் மகனை காதலித்து வந்தார். இது தனது கணவருக்கு பிடிக்கவில்லை.

மாமியார் வீட்டுக்கு அடிக்கடி சென்ற கணவர் - கர்ப்பமானதால் அதிர்ந்த குடும்பம்!

மாமியார் வீட்டுக்கு அடிக்கடி சென்ற கணவர் - கர்ப்பமானதால் அதிர்ந்த குடும்பம்!

விசாரணை

இதனால், அந்த வாலிபரை வீட்டுக்கு அழைத்து வந்து அடித்து துன்புறுத்தினார். பின்னர் அந்த வாலிபரின் செல்போனில் இருந்த மகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து சமூக வலைதளங்களில் பரப்பினார். மேலும், தன்னையும் மற்றும் மகளையும் அடித்து துன்புறுத்தினார்.

மகளின் அந்தரங்க வீடியோக்களை பரப்பிய தந்தை - மனமுடைந்து பெண் செய்த காரியம்! | Father Who Spread His Daughters Intimate Videos

இதில், எங்கள் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அந்தரங்க வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் மகள் மனமுடைந்து பினாயில் குடித்து தற்கொலை செய்ய முயன்றார்" என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.