ராக்கி கட்ட ஆசைப்பட்ட மனைவி - மூக்கை அறுத்த கணவர்

Uttar Pradesh
By Karthikraja Aug 20, 2024 07:50 AM GMT
Report

தாய் வீட்டுக்கு செல்ல ஆசைப்பட்ட மனைவியின் மூக்கை கணவர் அறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரக்க்ஷா பந்தன்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பூர்வா பகுதியில் வசித்து வருபவர் ராகுல். ரக்க்ஷா பந்தனை முன்னிட்டு சகோதரனுக்கு ராக்கி கட்ட தனது தாய் வீட்டுக்கு செல்ல வேண்டுமென ராகுலின் மனைவி அனிதா கூறியுள்ளார். 

uttarpradesh cut wife nose

அதற்கு ராகுல் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ராகுல் அனிதாவின் மூக்கை அறுத்துள்ளார்.

குழந்தை இல்லாததால் கிண்டல் செய்த நண்பர் - மனைவியிடம் கணவர் செய்த செயல்

குழந்தை இல்லாததால் கிண்டல் செய்த நண்பர் - மனைவியிடம் கணவர் செய்த செயல்

வழக்கு பதிவு

ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை ராகுலின் சகோதரன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தீவிர சிகிச்சைக்குப் பின் அனிதா நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது கணவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வீடியோ பதிவு செய்து சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் ராகுல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளதாக ஹர்டோய் காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.