குழந்தை இல்லாததால் கிண்டல் செய்த நண்பர் - மனைவியிடம் கணவர் செய்த செயல்

Kallakurichi
By Karthikraja Aug 19, 2024 03:06 PM GMT
Report

மது அருந்தும் போது குழந்தை இல்லாததால் நண்பர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

குழந்தை பாக்கியம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் கிருஷ்ணன்(38) கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற பெண்ணுடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

couples

இந்த தம்பதிகளுக்கு 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் இவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதெல்லாம் உறவினர்களும் நண்பர்களும் இவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர். மேலும் குழந்தை வேண்டும் என்பதற்காக அதற்கு தேவையான மருத்துவச் சிகிச்சைகளை கலைச்செல்வி மேற்கொண்டு வந்துள்ளார். 

பள்ளியில் வைத்தே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - விஷயம் தெரிந்து ஆசிரியர்கள் செய்த கொடூரம்

பள்ளியில் வைத்தே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - விஷயம் தெரிந்து ஆசிரியர்கள் செய்த கொடூரம்

நண்பர்கள் கிண்டல்

ஒருகட்டத்தில், குழந்தையின்மையால் ஏற்பட்ட சண்டையில், தனது கணவரை விட்டுப்பிரிந்த கலைச்செல்வி கடந்த இரண்டு மாதங்களாக தனது தந்தை வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணன் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, கிருஷ்ணனின் நண்பர்கள், " உனக்கெல்லாம் எப்போமே குழந்தை பிறக்காது நீ எல்லாம் செத்துப் போ" எனச்சொல்லி கிருஷ்ணனை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கிருஷ்ணன், அதிகளவில் மது அருந்திவிட்டு, தலைக்கேறிய போதையில் நேராகத் தனது மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில், தான் கொண்டு வந்த கத்தியை வைத்து உறங்கிக் கொண்டிருந்த மனைவி கலைச்செல்வியின் கழுத்தை அறுத்துள்ளார். 

arrest

இவரது சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தா கலைச்செல்வியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் கலைச்செல்விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சங்கராபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கிருஷ்ணனை கைது செய்து கடலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.