எலான் மஸ்க் செய்து தந்த வசதி..இப்போ ஒரு கிராமமே ஆபாச படத்திற்கு அடிமை!
பழங்குடியினர் வாழும் கிராமம் மொத்தமாக ஆபாசப் படங்களுக்கு அடிமையாகியுள்ளனர்.
எலான் மஸ்க்
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். அப்படி அவர் நடத்தி வரும் ஒரு நிறுவனம் தான் ஸ்டார்லிங். இதில், சாட்டிலைட் மூலமாகத் தொலைதூர கிராமங்களுக்கும் இணையச் சேவையைக் கொண்டு சேர்ப்பதே இந்நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
இது போல பல பகுதிகளில் ஸ்டார்லிங்க் இணையச் சேவையை வழங்கி வருகிறது. அப்படி தான் தென் அமெரிக்காவின் அடர்ந்த அமேசான் மழைக் காடுகளில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்திற்கு ஸ்டார்லிங்க் இணையச் சேவையை வழங்கி இருக்கிறது. வெறும் 2000 நபர்களை கொண்ட இந்த மாருபோஸ் என்ற பழங்குடியினர்.
இவர்களுக்கென தனி மொழியும் உண்டு. இந்த கிராமத்தில் முதல்முறையாக ஸ்டார்லிங்க் மூலமாக இணையச் சேவையைப் பெற்றுள்ளது. இது ஒரு சந்தோஷமான விஷயம் என்றாலும் இந்த இணைய வசதி யாருமே எதிர்பார்க்காத ஒரு தாக்கத்தை அங்கு ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு கிராமம்
இது தொடக்கத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சிகளுமானதாக இருந்தாலும் தற்போது இது எதிர்மறையான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக அந்த கிராம மக்கள் புலம்புகிறார்கள். இதை அங்கு சென்ற செய்தியாளர் ஒருவர் பதிவு செய்துள்ளார். அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த சாய்னாமா மருபோ(73) இது குறித்து கூறுகையில்,
முதலில் எங்களுக்கு இணைய சேவை கிடைத்த போது அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர் தொலை தூரத்தில் இருக்கும் எங்கள் உறவினர்களுடன் வீடியோ கால் பேச முடிந்தது. ஆனால் இப்போது நிலைமை மோசமாகிவிட்டன. இணைய வசதி இளைஞர்களைச் சோம்பேறியாக மாற்றிவிட்டது.
இது அவர்களின் கலாச்சாரத்தையும் மொத்தமாக மாற்றிப் போட்டுவிட்டதாம்.. இங்குள்ள இளைஞர்கள் இப்போது தங்கள் மொபைல்களுக்கு அடிமையாகிவிட்டனர்.. 24*7 மொபைல்கள் உடன் தான் இருக்கிறார்களாம்.. குறிப்பாக ஆபாசப் படங்களுக்கு அவர்கள் அடிமையாகவிட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "பலரும் இப்போது ஆபாசப் படங்களுக்கு அடிமையாகிவிட்டார்கள்.. இளைஞர்கள் க்ரூப் சாட்களில் ஓபனாகவே ஆபாச வீடியோக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.. ஆபாச வீடியோக்களால் இளைஞர்கள் பெண்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதாகவும் எங்கள் காதுகளுக்குச் செய்திகள் வந்துள்ளன என கூறியுள்ளார்.