Wednesday, May 14, 2025

குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமல்ல - உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Supreme Court of India Crime Madras High Court
By Sumathi a year ago
Report

ஆபாச படம் குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆபாச படம்

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் மீது குழந்தைகள் தொடர்புடைய ஆபாச வீடியோக்களை பதவிறக்கம் செய்து பார்த்ததாக, போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

madras high court

தொடர்ந்து, வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த இளைஞர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,

திரிபுரா சட்டசபையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏ. : வீடியோவால் சர்ச்சை

திரிபுரா சட்டசபையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏ. : வீடியோவால் சர்ச்சை

உச்சநீதிமன்றம் கண்டனம்

ஆபாச படங்களை தரவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் இல்லை என்றும் மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பதுதான் சட்டப்படி குற்றம் என்று கூறி வழக்கை ரத்து செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து குழந்தைகள் உரிமைக்கான கூட்டணி என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

supreme court of india

தற்போது இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், ஒரு தனி நீதிபதி எவ்வாறு இதுபோன்று கூற முடியும். இது கொடுமையானது எனத் தெரிவித்தார். இதனையடுத்து இவ்வழக்கில் பதிலளிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.