ஆபாச படம் பார்ப்பவர்கள் தான் டார்கெட்; பணம்பறித்த கும்பல் - கோவையில் பரபரப்பு!
சைபர் கிரைம் போலீசார் போல் நடித்து மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
மோசடி
ஆபாச படம் பார்ப்பவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட கும்பலை கோவை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் தினமும் ரேண்டமாக ஒரு செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு சைபர் கிரைம் போலீசார் பேசுவதாக கூறியுள்ளனர்.
பின்னர் எதிரில் இருப்பவர்களிடம், நீங்கள் இரவு 2 மணிவரை ஆபாசப்படம் பார்த்துள்ளீர்கள். அதனால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்போகிறோம் என்று கூறியுள்ளனர்.
கைது
இதிலிருந்த தப்பிக்க வேண்டுமென்றால் அபராத தொகை செலுத்த வேண்டும் என்று கூறி, பலரிடம் ரூ.20,000 வரை பணத்தை பறித்துள்ளனர்.
இப்படி கோவையில் பணத்தை ஏமாந்தவர்கள் பலர், தங்கள் பெயர் முகவரி எதுவும் கூறாமல் போலீஸில் புகார் அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த மோசடி கும்பலை பல மாதங்களாக தேடி வந்த போலீஸார், 9 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.
அதில் 5 பேர் கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.