இனி கண்கள் இல்லாமலேயே பார்வை பெறலாம் - வந்தாச்சு புதிய கருவி!
எலான் மஸ்க்-கின் நிறுவனம் கண்டுபிடித்துள்ள புதிய கருவி கவனம் பெற்றுள்ளது.
நியூராலிங்க்
எலான் மஸ்க் உருவாக்கியது தான் நியூராலிங்க் நிறுவனம். மூளைக்கும், கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் இணைப்பை உருவாக்கும் வகையிலான ‘சிப்’-ஐ மனிதனின் மூளையில் பொருத்தி,
நோய்களுக்கு தீர்வு காணும் முறைதான் இந்த நிறுவனத்தின் பணி. அதன்படி, முதலில் உருவானது டெலிபதி என்ற சிப். இதன் மூலம் மூளையில் தோன்றும் எண்ணங்களை தொழில்நுட்பத்தில் செயல்படுத்த முடியும்.
Blindsight
தற்போது இதன் அடுத்த முயற்சி கவனம் பெற்றுள்ளது. பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள் அல்லது விபத்து மற்றும் நோய் காரணமாக பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்யும் Blindsight என்ற சிப்.
இது கண்கள் மற்றும் ரெட்டினா இல்லாமல் பார்வை தருகிறது. நாம் பார்ப்பதற்கான அனைத்து விஷயங்களையும் கட்டுப்படுத்தும் Cortexல் ஒரு சிப்பை பொருத்தி, அதை மூளையுடன் இணைக்கிறது.
இதன் மூலம் கண்கள் இல்லாமலேயே பார்வை பெற முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமெரிக்காவின் மருந்து மற்றும் நிர்வாக அமைப்பான FDA அனுமதி அளித்துள்ளது.