BSNL உடன் கைகோர்க்கும் எலான் மஸ்க் - கலக்கத்தில் ஜியோ ஏர்டெல்
BSNL நிறுவனத்துடன் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இணைந்து செயல்பட உள்ளது.
பிஎஸ்என்எல்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் ஆகியவை கட்டணங்களை உயர்த்தியுள்ளன. கட்டண உயர்வையடுத்து பலரும் பிஎஸ்என்எல் க்கு மாறும் முடிவை எடுத்தனர். இந்த காலகட்டத்தில் 2 மில்லியன் மக்கள் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் ஏற்கனவே டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்துடன் இணைந்து, இந்தியா முழுவதும் 1,000க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு 4G இணைய சேவைகளை கொண்டு வருவதற்காக 50 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஸ்டார்லிங்
இந்தநிலையில், ஜியோ, ஏர்டெல்லுக்கு போட்டியாக, BSNL, TCS மற்றும் எலான் மஸ்கின் Starlink ஆகிய நிறுவனங்களின் ‘Triumvirate’ என்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஸ்டார்லிங்க் நிறுவனம் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் செயற்கைக்கோள்மூலம் இணையசேவை வழங்கி வருகிறது.
இந்தியாவிலும் இதற்கான அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது. தற்போது இதற்காக கொள்கை அளவிலான ஒப்பந்தத்தை மத்திய அரசு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வணிகச் சேவைகளைத் தொடர இன்னும் ஸ்டார்லிங் நிறுவனத்துக்கு மேலும் பல ஒழுங்குமுறை அனுமதிகள் தேவைப்படுகிறது.
BSNL, TCS மற்றும் Starlink இணைந்து செயற்கை கோள் தொழில்நுட்பம் மூலம் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களையும் சிறந்த சேவையையும் வழங்கலாம் என கூறப்படுகிறது. இந்த கூட்டமைப்பு தற்போது தொலைதொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தும் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.