இனி கால், டேட்டா, ஓடிடிக்கு தனி தனி ரீசார்ஜ் - வருகிறது புதிய திட்டம்

Airtel Smart Phones Mobile Phones Reliance Jio
By Karthikraja Jul 29, 2024 12:00 PM GMT
Report

கால், டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகளுக்கு தனித்தனியே ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வருமாறு டிராய் பரிந்துரைத்து உள்ளது.

ஸ்மார்ட்போன்

இந்தியாவில் ஏறக்குறைய 112 கோடி பேர் மொபைல் போன் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 65.90 கோடி பேர், ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகின்றனர். 

recharge

இதில் பலர் பயன்படுத்தாத ஓடிடி, எஸ்.எம்.எஸ் சேவைகளுக்கு கட்டணம் செலுத்துவதாகவும், ஸ்மார்ட்போன் அல்லாத சாதாரண போன்களை பயன்படுத்தும் மக்கள் பலர், தாங்கள் பயன்படுத்தாத டேட்டா சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும், புகார் கூறி வந்தனர். 

இனி Whatsapp ல் செய்தி அனுப்ப நம்பர் தேவை இல்லை - வெளியாக உள்ள அசத்தல் அப்டேட்

இனி Whatsapp ல் செய்தி அனுப்ப நம்பர் தேவை இல்லை - வெளியாக உள்ள அசத்தல் அப்டேட்

ரீசார்ஜ்

இது குறித்து இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஆலோசனை குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் சிறப்பு கட்டண திட்டங்கள் மற்றும் காம்போ ரீசார்ஜ் திட்டங்கள் போன்றவற்றின் வேலிடிட்டி காலத்தை, தற்போதுள்ள 90 நாட்களிலிருந்து அதிகரிக்க வேண்டும். 

மேலும், தற்போது பயன்பாட்டில் உள்ள ரீசார்ஜ் திட்டங்களுடன் கால், டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ் ஆகிய சேவைகளுக்கு தனித்தனியே மற்றும் ஒருங்கிணைந்த புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வருவது அவசியம் என தெரிவித்துள்ளது. 

watching ott in mobile

இது தொடர்பாக புதிய மாற்றங்கள் அவசியமென கருதுவோர், ஆகஸ்ட் 16ம் தேதிக்குள்ளாகவும், மாற்றங்கள் தேவையில்லை என கருதுவோர் ஆகஸ்ட் 23 தேதிக்குள்ளாகவும் தங்கள் கருத்துகளை டிராய் இணையதள முகவரிக்கு அனுப்பலாம் என அறிவித்துள்ளது.