பூமியில் தொடர்ந்து 9 நாட்கள் கேட்ட மர்ம ஒலி - உடைந்த ரகசியம்!
பூமியில் இருந்து கேட்ட விசித்திர ஒலியினால் விஞ்ஞானிகள் குழப்பத்தில் உள்ளனர்.
விசித்திர ஒலி
கிரீன்லாந்தின் கிழக்கு முனையில் உள்ள ஒரு பொருளில் இருந்து ஒலி வருகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்த விசித்திர ஒலி தொடர்ந்து 9 நாட்கள் கேட்டுள்ளது.
அதன் பெயர் ஃபிஜோர்ட் (fjord). இது நீண்ட, ஆழமான, குறுகிய நீர்நிலை. உச்சத்தில் உள்ள பனியால் மூடப்பட்ட பகுதிகளில் இது நிகழலாம்.
ஃபிஜோர்ட்
பனிப்பாறை அரிப்பு U-வடிவ பள்ளத்தாக்குகளை உருவாக்குகிறது. கடல் வெள்ளம் இந்த பகுதிக்குள் நுழையும்போது அது fjord என்று கூறப்படுகிறது.
இந்த சத்தம் குறித்து அச்சப்பட வேண்டாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதன் பின்னணியில் இயற்கையான காரணங்கள் மட்டுமே உள்ளன என கூறியுள்ளனர்.