டால்பினுடன் தீவிர உறவில் 20 வயது இளைஞர் - விசித்திர சம்பவம்!
முதியவர் ஒருவர் டால்பினைக் காதலித்ததாக கூறிய செய்தி கவனம் ஈர்த்துள்ளது.
டால்பினுடன் காதல்
அமெரிக்கா, புளோரிடாவைச் சேர்ந்தவர் மால்கம். புகைப்படக் கலைஞராக உள்ளார். ஒரு பொழுதுபோக்கு பார்க்கில் உள்ள குளத்தில் புகைப்படம் எடுக்க சென்றுள்ளார்.
அங்கு டால்பின் ஒன்றுடன் அதிக நேரம் செலவழித்துள்ளார். அதற்கு நண்பராகவும் மாறியுள்ளார். ஆரம்பத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்த அவர், அதிக காலம் பழகிய பின்னர் அதன் மீது காதல் கொண்டுள்ளார். டால்பினுடன் தனது உறவைத் தொடங்கியபோது 20 வயது இளைஞராக இருந்துள்ளார்.
விசித்திர சம்பவம்
தொடர்ந்து 9 மாதங்களுக்குப் பின், அவர் வேலை செய்து வந்த பூங்கா மூடப்பட்டதோடு, வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இது அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், டால்பின் மீது காதல் கொண்ட பிறகு, எங்கள் உறவு இயற்கைக்கு அப்பாற்பட்டது.
அந்த டால்பின் இறந்தபோது, மன அழுத்தத்திற்கு ஆளானேன். இதிலிருந்து மீளவே நீண்ட ஆண்டுகளுக்கு மேல் ஆகியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இவரது சுயசரிதை புத்தகத்தில் டால்பினுடனான தன்னுடைய காதலை எழுதியுள்ளதோடு, அந்த புத்தகத்தை டால்பின்களுக்கு அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.