கிராம மக்கள் நடத்திய கொடூர தாக்குதல்; காட்டு யானை உயிரிழப்பு - பதறவைக்கும் வீடியோ
கிராம மக்கள் நடத்திய கொடூர தாக்குதலில் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
கொடூர தாக்குதல்
மேற்கு வங்கம், Jhargram கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் யானைக் கூட்டம் புகுந்துள்ளது. உடனே, இளைஞர்கள் ஏராளமானோர் தீப்பந்தங்கள் மற்றும் கூர்மையான இரும்புக் கம்பிகளுடன் சென்று ஒரு யானையை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
தீ வைத்து வீசப்பட்ட இரும்புக் கம்பி ஒன்று பெண் யானையின் முதுகெலும்பில் குத்தியது. இதில், படுகாயமடைந்த யானையை 8 மணி நேரத்திற்குப் பின் வனத்துறையினர் சிகிச்சைக்காக மீட்டுள்ளனர்.
யானை உயிரிழப்பு
தொடர்ந்து, முகாமுக்கு அழைத்துச்சென்று பராமரிக்கப்பட்ட அந்த யானை மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அண்மையில் காட்டு யானைகள் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததால், ஆத்திரத்தில் இவ்வாறு கொடூரமாக தாக்கியுள்ளனர்.
On August 12, #India celeberated #WorldElephantDay2024 & heard a lot from @moefcc on all the great things v have done for #elephants.
— prerna singh bindra ??? (@prernabindra) August 17, 2024
I would like to hear from @moefcc and @ForestDeptWB
now on the horrific harassment, torture and killing of an #elephant in #Jhargam #WestBengal… pic.twitter.com/KTTzAdStrG
இந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வன விலங்குகள் நல ஆர்வலர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மனிதர்கள் மற்றும் காட்டு யானைகள் இடையேயான மோதல் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், நெருப்பு பந்துகளையும், இரும்பு கம்பிகளையும் யானைகள் மீது வீசுவதற்கு உச்சநீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.