குடியிருப்பு பகுதியில் நுழைய முயன்ற காட்டு யானையை விரட்டியடித்த வளர்ப்பு நாய்கள்

karnataka viralvideo wildelephant dogfightswithelephant
By Swetha Subash Feb 12, 2022 12:43 PM GMT
Report

கர்நாடகாவில் ஒற்றை காட்டு யானையை வளர்ப்பு நாய்கள் ஒன்று சேர்ந்து விரட்டியடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு அருகே வந்த ஒற்றை காட்டு யானையை வளர்ப்பு நாய்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புர் அருகே உள்ள மத்தூர் கிராமத்தில் ஒரு விவசாயி குடியிருப்புக்கு அருகே ஒற்றை காட்டு யானை வந்துள்ளது.

காட்டு யானையை குடியிருப்பு பகுதிக்குள் நுழையவிடாமல் விவசாயியின் 4 வளர்ப்பு நாய்கள் யானையை துரத்த முயன்றது.

ஆக்ரோஷம் அடைந்த காட்டு யானை நாய்களை விரட்டியது.

அந்த நாய்கள் காட்டு யானைக்கு எதிரே நின்று அரை மணி நேரம் போராடி விரட்டியடித்தது.

இந்த சம்பவத்தை விவசாயி வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.