ரூ.2 கோடி மதிப்பிலான கோவில் தேவஸ்தான பஸ்சை திருடிய மர்மநபர் - பரபரப்பு!
திருப்பதி கோவிலின் தேவஸ்தான பஸ்சை மர்மநபர் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேவஸ்தான பஸ்
ஆந்திராவில் இருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக 10 மின்சார பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த பஸ்சில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் திருமலையில் உள்ள ஹில்ஸ் வீவ் காட்டேஜ் தங்கும் விடுதிக்கு அருகே பஸ்சை நிறுத்திவிட்டு டிரைவர் டீ குடிக்க சென்றுவிட்டார், திரும்பி வந்து பார்த்தபொழுது பஸ்சை காணவில்லை.
பேருந்து திருடுபோனதால் கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக போலீஸில் புகாரளிக்க, பேருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டனர்.

கனடா - இந்தியா மோதல்.. விதிவிலக்கே கிடையாது, குற்றவாளி நீதிக்கு முன் நிற்கவேண்டும் - அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்!
மீட்ட போலீசார்
இந்நிலையில், அந்த பேருந்தில் இருக்கும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டிருந்தது, அதன்மூலம் திருப்பதி மாவட்டம், நாயுடுபேட்டை அருகே பேருந்து நின்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், தேவஸ்தான அதிகாரிகளுடன் சென்ற போலீசார், பைபாஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை மீட்டனர்.
மேலும், அந்த பேருந்தின் பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துவிட்டதால், இதனை கடத்திய நபர் பேருந்தை விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. அந்தப் மின்சார பஸ்சின் மதிப்பு ரூ.2 கோடியாகும், தொடர்ந்து, தப்பியோடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.