சந்திர கிரகணம்: திருப்பதி கோவில் 11 மணி நேரம் மூடல்!

Andhra Pradesh
By Sumathi Nov 04, 2022 06:32 AM GMT
Report

வரும் 8ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோவில் 11 மணி நேரம் மூடப்படுகிறது.

சந்திர கிரகணம்

சந்திர கிரகணம் வரும் 8ஆம் தேதி செவ்வாய்கிழமை பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 வரை நடைபெறுகிறது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோவில் காலை 8.40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7.20 மணிக்கு திறக்கப்படும்.

சந்திர கிரகணம்: திருப்பதி கோவில் 11 மணி நேரம் மூடல்! | Tirupati Temple Closed For 8Th Lunar Eclipse

அதன் அடிப்படையில் 11 மணி நேரம் கோவில் மூடப்படுகிறது. எனவே, விஐபி தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான ரூ.300 கட்டண தரிசனம் நேர ஒதுக்கீடு செய்யப்படும். இலவச தரிசன டிக்கெட், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பரமோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி கோவில் மூடல்

மேலும், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் உள்ள பெற்றோர்கள், வெளிநாட்டு இந்தியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சலுகை தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கிரகணம் முடிந்த பிறகு இலசவ தரிசனத்தில் மட்டும் வைகுண்ட வளாகம் 2ல் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். வழக்கமாக கிரகண நாட்களில் சமையல் செய்ய மாட்டார்கள். அதனால், அன்னபிரசாத கூடமும் மூடப்பட்டிருக்கும்.

இதனால் திருப்பதி வரும் பக்தர்கள் இதற்கு ஏற்றார் போல் திட்டமிட்டு வருமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.