பக்தர்களுக்கு குட்நியூஸ்: இனி திருப்பதியில் பக்தர்கள் காத்திருக்க வேண்டாம்!
திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி
திருப்பதியில் தரிசனத்திற்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிவது வழக்கமான ஒன்றுதான். இதனை கட்டுப்படுத்தும் விதமாக தேவஸ்தானம் இலவச டோக்கன் மற்றும் ரூ.300 கட்டண டோக்கன் வழங்கி பக்தர்களை அனுமதித்து வருகிறது.
இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் இந்த ஆண்டு ஏப்ரம் மாதத்தில் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிட்ட தரிசன் டோக்கன் வழங்கும் முறையை நிறுத்தியது. தற்போது, மீண்டும் இந்த டோக்கனை வழங்க அறங்காவலர் கூட்டத்தின்போது முடிவு செய்யப்பட்டது.
ஸ்லாட் டோக்கன்
நவம்பர் மாதம் முதல் ஸ்லாட் டோக்கன் நடைமுறையை தொடங்கி உள்ளது. இந்த டோக்கன் திருப்பதியில், பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் மற்றும் ரயில்நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜசாமி சத்திரம்-2 ஆகிய இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
சனி,ஞாயிறு, திங்கள் கிழமைகளில் 25,000 டோக்கன்களும், மற்ற நாட்களில் 15,000 டோக்கன்களும் வழங்கப்படுகிறது. ஒருமுறை ஆதார் அட்டையை சமர்பித்து டோக்கன் பெரும் பக்தர்கள் மீண்டும் 30 நாட்களுக்கு பிறகுதான் இந்த வசதியை பெற முடியும்.
இதன் மூலம் செல்லும் பக்தர்கள் 2 மணி நேரங்களில் சாமி தரிசனம் செய்யலாம். டோக்கன் கிடைக்கப்பெறாத பக்தர்கள் வழக்கம்போல் இலவசமாக வழிபடலாம்.