மின் கட்டணம் அதிரடி குறைவு.. ஆனால் அதில் ஒரு கண்டிஷன் - முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் கட்டணம் குறைக்கப்போவதாக முதலவர் அறிவித்துள்ளார்.
கள ஆய்வு
தமிழகம் முழுவதும் வளர்ச்சி பணிகள் மற்றும் சட்ட ஒழுங்குமுறை குறித்து கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
இதில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள ஊரக வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்குமுறை தொடர்பாக காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
முதல்வர் அறிவிப்பு
இந்நிலையில், அதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர், "மெட்ரோ பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சென்னை நாவலூர் சாலையில் நாளை முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது" என்று கூறினார்.
மேலும், அவர் சென்னை மற்றும் பிற மாநகராட்சி புறநகர் பகுதிகளில் 10 மற்றும் அதற்கு குறைவான வீடுகளை உடைய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ 8 லிருந்து ரூ 5.50 காசாக குறைக்கப்படுவதாகவும், 3 மாடிக்கு மிகாத, மின் தூக்கி இல்லாத சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இந்த மின் கட்டண சலுகை பொருந்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.