கிராமசபை கூட்டம் நடைபெறாது - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

villagepanchayatmeeting கிராமசபைகூட்டம் குடியரசுதினம் Republicday2022
By Petchi Avudaiappan Jan 25, 2022 12:21 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

குடியர தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் குடியரசு தினம் (ஜனவரி 26), உழைப்பாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), காந்தி ஜெயந்தி(அக்டோபர் 2) ஆகிய சிறப்பு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் பலமுறை இவை நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டன. 

இதனிடையே நாளை நாடு முழுவதும் குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, கிராம சபை கூட்டங்களை நடத்த அனுமதி இல்லை என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

இதனால் உள்ளாட்சி பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள், மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் விவாதத்து தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பை தொடர் இரண்டாவது ஆண்டாக அவர்கள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.