ரூ.11,000 கோடிக்கு மேல் நிதி பெற்ற பாஜக - எந்தெந்த கட்சிகள் எவ்வளவு பெற்றுள்ளது தெரியுமா?
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்ற அரசியல் கட்சிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள்
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி மற்றும் நிதி வழங்கிய நபர்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கும்படியும் எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதில், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2024 பிப்ரவரி 15 ஆம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கட்சிகள் லிஸ்ட்
தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து ரொக்கமாக பெற்ற கட்சிகளின் பட்டியலில் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, அதிமுக, பாரத் ராஷ்ட்ரிய சமிதி, தேசியவாத காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதாதளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதிகபட்சமாக பாஜக 11,562 கோடியே 50 லட்சம் ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் நடைமுறையை மத்திய அரசு 2018-ம் ஆண்டு கொண்டு வந்தது.
இந்த திட்டத்தின்கீழ், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான பத்திரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட்டு வந்தது.
இந்நிலையில், தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்று கூறி, அந்த நடைமுறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து கடந்த பிப்ரவரி 15-ம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.