பயங்கர விபத்து; நொடி பொழுதில் சரிந்து விழுந்த பிரச்சார மேடை - 5 பேர் பலி, 50 பேர் படுகாயம்!
பிரச்சார மேடை சரிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர், 50 பேர் படுகாயமடைந்தனர்.
பிரச்சார மேடை
மெக்சிகோ மாகாணத்தில் வருகின்ற ஜூன் 2ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டின் வடக்கு மாகாணமான நியூவோ லியோனிலில் உள்ள சான் பெட்ரோ கார்சா கார்சியா நகரில் பலத்த காற்று வீசியுள்ளது. அப்போது, குடிமக்கள் இயக்கம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் வாக்கு சேகரிப்பதற்காக
பிரச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடை எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்தன. இந்த விபத்தில் சிக்கிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், 50 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயங்கர விபத்து
இந்த கோர சம்பவம் தொடர்பாக வேட்பாளர் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் தனது இணையத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.விபத்தில் தனது குழு உறுப்பினர்களும் படுகாயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்துக்கு சென்று கொண்டிருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, நியூவோ லியோன் மாகாண ஆளுநர் பகிர்ந்துள்ள வீடியோவில் பொதுமக்களிடம் உரையாற்றினார். அதில், அப்பகுதியில் கடும் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் குடியிருப்புவாசிகள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், சான் பெட்ரோ கார்சா கார்சியாவில் மேடை சரிந்த விபத்தை அளுநர் சாமுவேல் கார்சியாவும் உறுதிப்படுத்தினார்.