ஒரே நேரத்தில் மேடையில் குவிந்த விசிக தொண்டர்கள்..இடிந்து விழுந்த படிக்கட்டு
Thol. Thirumavalavan
By Thahir
தொல்.திருமாவளவன் பங்கேற்ற சனாதன எதிர்ப்பு திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்ட மேடையில் ஏராளமான தொண்டர்கள் ஏறியதால் மேடை படிக்கட்டு உடைந்து விழுந்தது.
இடிந்து விழுந்த மேடை
திருவாரூரில் நேற்று முன்தினம் மாலை சனாதன எதிர்ப்பு திராவிட மாடல் விளக்க மாபெரும் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த திருமாவளவனை வரவேற்க திரண்ட ஏராளமான விசிக தொண்டர்கள் மேடை படிக்கட்டு மீது ஏறியதால் படிக்கட்டு உடைந்து விழுந்தது.
இதனால் பலர் கீழே விழுந்ததால் மேடை ஒளி ஒலி அமைப்பு துண்டிக்கப்பட்டது. திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் கீழே குதித்து கூட்டத்தினரை சமாதானபடுத்தினார்.
அவருடன் திருமாவளவன் பேசி அமைதி படுத்தியதால் 30நிமிடங்கள் கழித்தே சகஜ நிலை திரும்பியது.