மண மேடையில் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டும் போது மயங்கி விழுந்த மாப்பிள்ளை - துடிதுடித்து கதறிய மணப்பெண்
பாட்னாவில் மணப்பெண்ணுக்கு தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளைக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சரிந்து விழுந்த மாப்பிள்ளை
பீகாரின் கான்பூரைச் சேர்ந்தவர் வினீத்குமார் வயது 30. இவருக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதாகும் ஆயுஷி என்பவருக்கும் கடந்த புதன்கிழமை இரவு திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
அவர்களின் முறைப்படி சடங்குகள் நடத்தப்பட்டுள்ளது. அப்போது சடங்குகள் முடிய தாமதம் ஆனதால் இருவருக்கும் வியாழக்கிழமை திருமணம் நடத்த இருப்பதாக கூறி பெற்றோர் தள்ளி வைத்துள்ளனர்.
விடியற்காலை திருமண சடங்குகள் முடிந்து காலை 8 மணிக்கு தாலி கட்ட மாப்பிள்ளை இருந்த தயாராக இருந்த போது, திடீரென மயக்கம் வருவது போல் இருக்கவும் வினீத் ஒரு சேரில் உட்கார்ந்துள்ளார்.
அப்போது மாப்பிள்ளைக்கு அவரது மாமனார் டீ கொண்டு வந்துள்ளார். அப்போது திடீரென அவரது கண் முன்னே வினீத் தரையில் சரிந்து விழுந்தார்.
கதறி துடித்த மணப்பெண்
இதனை பார்த்த இரு வீட்டாரும் மாப்பிள்ளையை துாக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கதறிய படி ஓடியுள்ளனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் முன்கூட்டியே கூட்டி வந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று கைவிரித்துள்ளனர்.
இதை கேட்டு மணப்பெண் ஆயுஷ் மயங்கி விழுந்தார். பின்னர் மயக்கம் தெளிந்து சுயநினைவுக்கு வந்த பிறகு, நீ என்கூட வாழப்போகிறாய் என்று நினைத்தேன் ஆனால் இப்போது நீ இல்லை.