பட்டப்பகலில் தம்பதி கொடூர கொலை - 70வது திருமணம் நடக்கவிருந்த நிலையில் துயரம்
முதிய தம்பதியைக் கொன்று, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
நகை கொள்ளை
சேலம் சூரமங்கலத்தை அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (65). இவரது மனைவி வித்யா (60). தனது வீட்டின் ஒரு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், பாஸ்கரனும் வித்யாவும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர். உடனே விரைந்து வந்த போலீஸார், இறந்த வித்யாவின் உடலை மீட்டு, பலத்த காயத்துடன் இருந்த பாஸ்கரனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தம்பதி கொலை
ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், வித்யா அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. மேலும், கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். அந்த பகுதியில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார். கடன் பிரச்சினை காரணமாக இருவரையும் அடித்து கொலை செய்ததாகவும், அவர்களிடம் இருந்து 10 சவரன் செயினை எடுத்துச் சென்றதாகவும் சந்தோஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.