7 மாதம்தான்.. கோயில் திருவிழாவிற்கு போன காதல் ஜோடி - நேர்ந்த துயரம்
புது மணத் தம்பதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம்
ஈரோடு, புதுக்கொத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரன்(23). கட்டிட தொழிலாளியான இவருக்கு சின்னகரடு பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி (19) என்ற பெண்ணுடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். பின் புதுக்கொத்துக்காடு பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பிரியதர்ஷினியின் பெற்றோர் வீட்டில் திருவிழா நடந்துள்ளது. இதற்காக இருவரும் சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டு பிரியதர்ஷினி வீட்டிற்கு கிளம்பியுள்ளார். இதையடுத்து அவரை பின் தொடர்ந்து சந்திரனும் சென்றுள்ளார்.
தம்பதி தற்கொலை
ஆனால் இருவரும் வீடு திரும்பவில்லை. உடனே குடும்பத்தினர் தேடிய நிலையில், இருவரும் ஊருக்கு வெளியே உள்ள ஒரு கிணற்றில் தம்பதி இருவரும் பிணமாக மிதந்துக் கொண்டிருந்தனர். சம்பவம் குறித்து அறிந்து விரைந்த போலீஸார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர் விசாரணையில், பிரியதர்ஷினி கிணற்றில் குதித்து இருக்கலாம் என்றும் அப்போது அவரை காப்பாற்ற நினைத்து சந்திரனும் கிணற்றில் குதித்து இருக்கக்கூடும் என்றும் இருவருக்கும் நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.