பாஜக பெண் நிர்வாகி நடுரோட்டில் தலை துண்டிக்கப்பட்டு கொலை - என்ன காரணம்?
பாஜக பெண் நிர்வாகி சரண்யா என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப விவகாரம்?
மதுரையைச் சேர்ந்தவர் சரண்யா(35). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவரது கணவர் சண்முகசுந்தரம் 2021-ல் இறந்து விட்டார்.
எனவே சரண்யா கழுகப்புலிக்காடு கிராமத்தை சேர்ந்த பாலன்(45) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். மேலும், டிராவல்ஸ் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளனர்.
பெண் படுகொலை
இந்நிலையில், கடையை பூட்டிவிட்டு மீன் மார்க்கெட் சந்து வழியாக சரண்யா தனது வீட்டுக்கு நடந்துச் சென்றுள்ளார். அப்போது சந்தில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சரண்யாவில் கழுத்தில் வெட்டி தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். உடனே சம்பவ இடம் விரைந்த போலீஸார் உடலை மீட்டு விசாரித்ததில்,
சரண்யா பாஜகவில் பொறுப்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கணவர் பாலனின், முதல் மனைவியின் மகன் கபிலன் மற்றும் குகன் உள்ளிட்ட 3 பேர் சரணடைந்தனர். பாலனின் சொத்துகளை கபிலனுக்கு வழங்க சரண்யா எதிர்ப்பு தெரிவித்ததால்
இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.